உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராவாக 5 பாட்டில் சரக்கு பந்தயத்துக்காக குடித்தவர் பலி

ராவாக 5 பாட்டில் சரக்கு பந்தயத்துக்காக குடித்தவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலார்: நண்பர்களுடன் பந்தயம் கட்டி, தண்ணீர் சேர்க்காமல் ஐந்து பாட்டில் மது அருந்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் பூஜாரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் கார்த்திக், 21. இவருக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஒன்பது நாட்களுக்கு முன், அவருக்கு குழந்தை பிறந்தது. கார்த்திக் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் மாலை, நண்பர்கள் வெங்கடரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட சிலருடன் மது அருந்தினார்.அப்போது வெங்கடரெட்டி, 'மதுவில் ஒரு சொட்டு தண்ணீர் கலக்காமல் ஐந்து பாட்டில் மது அருந்தினால், 10,000 ரூபாய் கொடுப்பேன்' என, கார்த்திக்கிடம் சவால் விடுத்தார்.இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கார்த்திக், 'மது அருந்துவதில் நான் என்றும் தோற்றது இல்லை' என்றார். இதன்படி, ஒரு சொட்டு தண்ணீர்கூட கலக்காமல், ஐந்து பாட்டில் மதுவை அருந்தி, சவாலில் வெற்றி பெற்றார். அதே நேரம், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. இதை உணர்ந்த கார்த்திக், 'நான் பிழைக்க மாட்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, என் உயிரை காப்பாற்றுங்கள்' என மன்றாடினார்.நண்பர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். கார்த்திக்கிடம் பந்தயம் கட்டிய வெங்கடரெட்டி, சுப்ரமணி உட்பட ஆறு பேர் மீது கார்த்திக்கின் குடும்பத்தினர் புகார் செய்தனர். வெங்கடரெட்டி, சுப்ரமணியை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்ற நால்வரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tetra
ஏப் 29, 2025 17:51

சிந்துவின் தாராளம்


Natchimuthu Chithiraisamy
ஏப் 29, 2025 13:45

மதுவினால் உடல் நலம் கெடுவது குடும்பநலம் கெடுவது குழந்தைகள் நலம் கெடுவது சொல்லும் செய்தி படித்தவர்கள் சிறிது சிறிதாக குறைத்து வெளியே வாருங்கள். அரசு இந்த பாவபணத்தில் ஆட்சி நடப்பதை விடட்டும்


sugumar s
ஏப் 29, 2025 09:45

DM should install his statue and write their achievement in all languages.


வாய்மையே வெல்லும்
ஏப் 29, 2025 08:38

இந்த குடிகாரனுக்கு பொண்ணுக்கொடுத்த மாமனாரை தேடி கண்டுபிடிங்க. என்னய்யா கூத்து நடக்குது இங்க. ?


m.arunachalam
ஏப் 29, 2025 05:34

சாதனை செய்து இந்தியாவை முன்னேற்ற முயற்சி செய்த வீர இளைஞர்கள் . வாழ்த்துக்கள் . தெளிதல் நலம் .