உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுற்றுச்சூழலை பாதுக்காக்க அதிரடி மக்காச்சோளத்தில் பால் பாக்கெட்டுகள்

சுற்றுச்சூழலை பாதுக்காக்க அதிரடி மக்காச்சோளத்தில் பால் பாக்கெட்டுகள்

பெங்களூரு: மக்காச்சோளத்தை பயன்படுத்தி பால் பாக்கெட்டுகள் தயாரிக்க 'பாமுல்' திட்டமிட்டு உள்ளது.'பாமுல்' எனும் பெங்களூரு பால் கூட்டமைப்பு சங்கம், ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் பால் மற்றும் தயிர் விற்பனை செய்கிறது. இதற்காக, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலித்தீன் பாக்கெட்டுகளை தயாரிக்கிறது. இந்த பாக்கெட்டுகள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியவை. இதை கருத்தில் கொண்ட பாமுல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.இவ்வகையில், புதிய திட்டம் ஒன்றில் இறங்கி உள்ளது. இதன்படி, பாலித்தீன் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளை தயாரிக்க உள்ளது. இந்த வகை, பாக்கெட்டுகள் மண்ணில் போட்டவுடன், ஆறு மாதங்களுக்குள் மக்கிவிடும். இதற்கான சோதனை, கனகபுராவில் உள்ள சிவனஹள்ளியில் நடக்க உள்ளது.இது போன்ற மக்கும் பாக்கெட்டுகள், வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளன. முதல் முறையாக இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பால் பாக்கெட்டுகள் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை