உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்கபல்லாபூரில் யானை மிதித்து பலி குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி

சிக்கபல்லாபூரில் யானை மிதித்து பலி குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகாவின் கெரேகட்டே கிராமத்தில் வசித்து வந்த ஹரிஷ், உமேஷ் கவுடா ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாவட்ட பொறுப்பு வகிக்கும் மின்துறை அமைச்சர் ஜார்ஜ், நேற்று உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். தனிப்பட்ட முறையில், தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிய அவர், ''தேவையான உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். நேற்று காலை மீண்டும் சிருங்கேரியில் தென்பட்ட மற்றொரு யானை, பாக்கு தோட்டத்தை நாசமாக்கியது. யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், கிராம மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அஞ்சுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை