உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தலித் தலைவர்களை மிதிக்கும் சித்தராமையா கார்ட்டூன் வெளியிட்டு ம.ஜ.த., குற்றச்சாட்டு

தலித் தலைவர்களை மிதிக்கும் சித்தராமையா கார்ட்டூன் வெளியிட்டு ம.ஜ.த., குற்றச்சாட்டு

'அஹிந்தா... அஹிந்தா... தலைவர் என்று முழக்கமிட்டு கொண்டே, பிற்படுத்தப்பட்ட தலித் தலைவர்களை முதல்வர் சித்தராமையா மிதித்து கொண்டிருக்கிறார்' என மாநில ம.ஜ.த., தனது 'எக்ஸ்' தளத்தில் கருத்து தெரிவித்து உள்ளது. 'எக் ஸ்' தளத்தில் ம.ஜ.த., குறிப்பிட்டு உள்ளதாவது: அஹிந்தா... அஹிந்தா.. தலைவர் என்று முழக்கமிட்டு கொண்டே, பிற்படுத்தப்பட்ட தலித் தலைவர்களை முதல்வர் சித்தராமையா மிதித்து கொண்டி ருக்கிறார். முதல்வரே, உங்கள் அதிகார பேராசையால், வால்மீகி சமூகத்தை சேர்ந்த மற்றொரு தலித் தலைவரை நீங்கள் பலிகொடுத்துள்ளீர்கள். உங்களின் சுயநல அரசியலுக்காக, உங்களின் நெருங்கிய கூட்டாளி ராஜண்ணாவின் அமைச்சர் பதவியை பறித்து உள்ளீர்கள். முன்னர், வால்மீகி மேம்பாட்டு கழகத்தில் இருந்து, 187 கோடி ரூபாய் கொள்ளை அடித்து, தெலுங்கானா, பல்லாரி தேர்தல்களில் பணத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி, நாகேந்திராவை பலிகடாவாக்கி, அவரை சிறைக்கு அனுப்பினீர்கள். இப்போது, ஓட்டு திருட்டு நடந்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்திய ராகுலை மகிழ்விக்கவும், உண்மை பேசுபவர்களின் வாயை அடைக்கவும் ராஜண்ணாவை நீக்கி உள்ளீர்கள். பி ற்படுத்தப்பட்டோர் தலைவரான மறைந்த தேவராஜ் அர்ஸ் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தலித் தலைவர்களின் முதுகில் குத்த சித்தராமையா தயங்குவதில்லை. இதற்கு ராஜண்ணாவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியே சான்றாகும். தலித் சமூகத்தை ஏமாற்றி, ஆட்சியில் தொடர உங்கள் மனசாட்சி உங்களை எப்படி அனுமதிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ