உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குமாரசாமியை அவமதித்ததாக  கோவில் முன் ம.ஜ.த., போராட்டம்

குமாரசாமியை அவமதித்ததாக  கோவில் முன் ம.ஜ.த., போராட்டம்

ஹாசன்: ஹாசனாம்பா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த, மத்திய அமைச்சர் குமாரசாமியை, ஹாசன் மாவட்ட நிர்வாகம் அவமதித்ததாக கூறி, ஹாசனாம்பா கோவில் முன்பு, எம்.எல்.ஏ., ஸ்வரூப் தலைமையில், ம.ஜ.த., தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி. இவர் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 17 ம் தேதி ஹாசனாம்பா கோவிலுக்கு, குமாரசாமி, மனைவி அனிதாவுடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் கோவிலுக்கு வரும் போது, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை அளித்து, கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஆசாரம் உள்ளது. ஆனால் குமாரசாமி வந்த போது, ஹாசன் கலெக்டர் வித்யாகுமாரி, எஸ்.பி., முகமது சுஜிதா உட்பட அதிகாரிகள் யாரும் வரவில்லை. குமாரசாமியை, ஹாசன் மாவட்ட நிர்வாகம் அவமதித்ததாக கூறி, ஹாசனாம்பா கோவில் முன்பு நேற்று காலை, ஹாசன் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஸ்வரூப் தலைமையில், அக்கட்சியின் தொண்டர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். மாவட்ட கலெக்டருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கோவிலுக்கு அந்நேரத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, இரும்பு தடுப்பு கம்பிகளை போலீசார் வைத்தனர். அதனை இடித்து தள்ளி கொண்டு கோவிலுக்குள் நுழைய, ம.ஜ.த., தொண்டர்கள் முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஹாசன் மாவட்டத்திற்கு தேவகவுடா குடும்ப பங்களிப்பு ஏராளம். மத்திய அமைச்சராக இருக்கும் குமாரசாமி அவமதிக்கப்பட்டது சரியல்ல. கலெக்டர் வித்யாகுமாரி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை போன்ற ஒருவர், இம்மாவட்ட கலெக்டராக வந்தது துரதிர்ஷ்டம் என்று, எம்.எல்.ஏ., ஸ்வரூப் பிரகாஷ் கூறினார். போராட்டம் நடத்தியவர்களிடம் உதவி கலெக்டர் மாருதி பேச்சு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை