உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

 தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

தங்கவயல்: தங்கவயல் பீரண்ண குப்பா என்ற கிராமத்தில் உள்ள தர்காவில் நேற்று உரூஸ் திருவிழா கொண்டாடப்பட்டது. தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்று காணிக்கை செலுத்தினார். தர்காவில் பக்தர்களின் வசதிக்காக தங்கவயல் தொகுதி வளர்ச்சி நிதியில் இரண்டு கழிப்பறைகள் தலா 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தர்கா பொறுப்பாளர்கள் திறந்து வைத்தனர். தர்காவுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரவும் கோரினர். திருவிழாவில் பலர் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !