உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உடுப்பி மடத்துக்கு நவ., 28ல் மோடி வருகை

உடுப்பி மடத்துக்கு நவ., 28ல் மோடி வருகை

உடுப்பி: வரும் நவம்பர் 28ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு வருகை தருகிறார். இது குறித்து, உடுப்பி மடாதிபதி சுகுணேந்திர தீர்த்த சுவாமிகள், நேற்று அளித்த பேட்டி: கடந்த 2008ல் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு வந்திருந்தார். இப்போது பிரதமரான பின், முதன் முறையாக, நவம்பர் 28ல், கிருஷ்ணர் மடத்துக்கு வருகிறார். அவர் முதல் முறை வந்தபோது, நானே மடத்தின் பொறுப்பில் இருந்தேன். இப்போதும் நானே மடாதிபதியாக இருக்கிறேன். உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் நடக்கும் கீதோற்சவம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். அவரை வரவேற்க தயாராகி வருகிறோம். பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய, மாநில அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ