உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பதிவு செய்ய பணம்: பிரியங்க்

 ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பதிவு செய்ய பணம்: பிரியங்க்

பெங்களூரு: “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பதிவு செய்ய நான் பணம் தருகிறேன்,” என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கேலி செய்து உள்ளார். அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பதிவு செய்வதற்கான பணத்தை நானே தருகிறேன். இதற்காக, என்னுடைய சொத்தை கூட விற்க தயார். நாடு முழுதுமுள்ள அனைத்து கிளைகளையும் பதிவு செய்ய நாங்களே பணம் தருகிறோம். ஆர்.எஸ்.எஸ்., மீது வழக்குகள் எதுவுமில்லை. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்படாத அமைப்பு. பதிவு செய்யப்படாத அமைப்பை எப்படி தடை செய்ய முடியும் என்பதால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தைரியம் இருந்தால் என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். அரசு பணி நியமன தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வந்து உள்ளோம். இளைஞர்களின் எதிர்காலத்தில் யாரும் விளையாடக்கூடாது. நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் கர்நாடகாவை சேர்ந்த எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது குறித்து தகவல் இல்லை. பண்டிகை நாட்களில் கலவரங்கள் ஏற்படக்கூடாது. எந்த மதத்தினரும் சட்டத்தை மீறி நடக்கக்கூடாது. தயவுசெய்து அனைவரும் சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டும். சமூகத்தில் மத ரீதியான மோதல்களை துாண்டி விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்