உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒன்றரை மாத ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்

ஒன்றரை மாத ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்

நெலமங்களா: பெற்ற தாயே, ஒன்றரை மாத ஆண் குழந்தையை, தண்ணீர் நிரப்பிய அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின் விஸ்வேஸ்வபுராவின் நாக்கல்லு கிராமத்தில் வசிப்பவர் பவன், 30. இவரது மனைவி ராதா, 28. தம்பதிக்கு ஒன்றரை மாத ஆண் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிய பவன், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவழித்தார்.தினமும் குடிபோதையில் வந்தார். இதனால், தம்பதிக்கிடையே மனஸ்தாபம்; பணப்பிரச்னை ஏற்பட்டது. ஒரு பக்கம் வறுமை, மற்றொரு பக்கம் கணவரின் குடிப்பழக்கத்தால் ராதா, மனம் நொந்திருந்தார்; குழந்தையை வளர்க்க கஷ்டமாக இருந்தது. எனவே நேற்று அதிகாலை, குழந்தையை தண்ணீர் நிரப்பிய அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்தார். காலையில் அக்கம், பக்கத்தினர் குழந்தையை காணாமல் சந்தேகமடைந்து, விசாரித்த போது விஷயம் தெரிந்தது.இது தொடர்பாக, நெலமங்களா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். ராதாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை