முதல்வருக்கு எதிராக பில்லி சூனியம் சிவகுமார் மீது முனிரத்னா குற்றச்சாட்டு
பெங்களூரு : பெங்களூரு துணை முதல்வர் சிவகுமார் ஏற்பாடு செய்திருந்த, 'பெங்களூரு நடிகே' என்ற நடைபயணத்துக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து, தர்ணாவில் ஈடுபட்டார். துணை முதல்வர் சிவகுமார், 'பெங்களூரு நடைபயணம்' என்ற திட்டத்தை துவக்கி உள்ளார். நேற்று முன்தினம் லால்பாக் தாவரவியல் பூங்காவில் பொது மக்களுடன் கலந்துரையாடினார். நேற்று ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மத்திகெரேயில் உள்ள ஜே.பி., பூங்காவில் பொது மக்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'கருப்பு தொப்பி' பொது மக்களுக்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அதில், தொகுதி எம்.எல்.ஏ.,வான முனிரத்னா, ஆர்.எஸ்.எஸ்., சீருடையுடன் பங்கேற்றார். மேடையில் வந்து அமரும்படி முனிரத்னாவுக்கு, சிவகுமார் அழைப்பு விடுத்தார். மேடைக்கு வந்த முனிரத்னா, 'மைக்கை எனக்கு கொடுங்கள்' என்றார். மைக்கை வாங்கி, 'இந்நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு இல்லை. ஒரு பொறுப்பான குடிமகனாக வந்துள்ளேன்' என்றார். அதற்கு சிவகுமார், 'சந்தோஷமாக உட்காருங்கள்' என்றார். குறுக்கிட்ட முனிரத்னா, 'இது பொது நிகழ்ச்சி அல்ல. போஸ்டரில் எம்.பி., - எம்.எல்.ஏ., படங்கள் இல்லை. இது பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டமா. இது காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி' என்றார். அப்போது முனிரத்னா, சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொறுமை இழந்த முனிரத்னா, 'இது காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி' என்று உரத்த குரலில் கூறினார். தர்ணா அங்கு வந்த போலீசார், முனிரத்னாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூங்காவின் வெளியே காந்தி படத்தை கையில் பிடித்தபடி தர்ணாவில் அமர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது முனிரத்னா அளித்த பேட்டி: என்னை தாக்க, ராம்நகர், சென்னபட்டணாவை சேர்ந்த ரவுடிகளை அழைத்துள்ளனர். என்னை அழைக்காமல் என் தொகுதியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர். காங்கிரஸ் பிளக்ஸ் பேனர் மட்டுமே வைத்து உள்ளனர். என்னை ராஜினாமா செய்ய வைப்பதே அவர்களின் இலக்கு. குஸ்மாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். எக்காரணத்தை கொண்டும் ராஜினாமா செய்ய மாட்டேன். என்னை, 'கருப்பு தொப்பி வா' என்று கூறி, தொகுதி மக்களை அவமதித்து உள்ளனர். இந்நிகழ்ச்சி நடப்பது குறித்து அழைப்பிதழ் கூட கொடுக்கவில்லை. நானாக இங்கு வந்து பார்வையாளர் இருக்கையில் அமர்ந்த பின்னரே, என்னை மேடைக்கு அழைத்துள்ளனர். மஹாபாரதமும், ராமாயணமும் பெண்ணால் தான் ஏற்பட்டது. அதுபோன்று ராஜராஜேஸ்வரி நகருக்கு பெண்ணை கொண்டு வருவதற்காக இந்த குருஷேத்திரம் நடக்கிறது. என்னை கொல்ல அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். பில்லி சூனியம் இங்கு போலீசார் இல்லை என்றால், இன்றே என்னை கொன்றிருப்பர். மு தல்வர் சித்தராமையா மிகவும் தைரியமானவராக இருந்தார். இப்போது அப்படி அல்ல; மாறிவிட்டார். கேரளாவுக்கு சென்ற சிவகுமார், அங்கு முதல்வருக்கு எதிராக பில்லி சூன்யம் வைத்து உள்ளார். இதற்காக காட்டு பன்றியும் பலி கொடுத்து உள்ளார். இது தொடர்பான தகவல் என்னிடம் உள்ளது. முதல்வர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ய முடியாது. அதனால் தான், பில்லி சூன்யம் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். தன் சகோதரரின் தோல்விக்கு காரணமானவர்களை பழிவாங்க, துணை முதல்வர் செயல்பட்டு வருகிறார். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தலை மனதில் வைத்தே இதுபோன்ற செயல்களில் துணை முதல்வர் ஈடுபட்டுள்ளார். உங்களை போன்று நாடகம் போட எனக்கு தெரியாது. அமித் ஷாவின் காலை பிடிக்கவில்லை. சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., பாடலை நான் பாடியதில்லை. பல் துலக்காமல், குளிக்காமல் இங்கு வரவில்லை. சட்ட விதிமுறைப்படி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால், அகற்றுமாறு கூறிவிடுவர். இன்று வைக்கப்பட்டு உள்ள பேனர்களை பாருங்கள். பேனரில் உங்கள் இருவரின் படங்களும், அரசின் சின்னமும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இங்கு வந்துள்ளேன். என் தலையில் வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ்., தொப்பியை யாரோ எடுத்துள்ளனர். இது ஆர்.எஸ்.எஸ்.,க்கு நேர்ந்த அவமானம். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. சிவகுமாருடன் வந்திருப்பது அனைவரும் ஏஜன்டுகள் தான். இவ்வாறு அவர் பேசினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எம்.எல்.ஏ., முனிரத்னா பல அவமரியாதைகளை செய்து உள்ளார். அந்த அமைப்புக்கென வரலாறு உள்ளது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனரோ, அதை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் பெயரை கெடுக்க, செயல்பட்டு வருகின்றனர். இது அரசின் பணிக்கான துவக்க விழா அல்ல. மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியாகும். அனைவருக்கும் என்ன மரியாதை அளிக்க வேண்டுமோ அதை செய்து உள்ளோம். ஜி.பி.ஏ., கூட்டம் நடத்தியபோது அங்கு வரவில்லை; பிரச்னைகளை கூறவில்லை. இங்கு வந்தவுடன், அவர்கள் இஷ்டப்படி பேசுகின்றனர். - சிவகுமார், துணை முதல்வர் இத்தொகுதி மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்காக யார் உழைக்கின்றனர் என்பது அவர்களுக்கே தெரியும். இத்தொகுதியில், 14 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக முனிரத்னா உள்ளார். மக்களின் குறைகளை கேட்க துணை முதல்வர் இங்கு வந்துள்ளார். மக்களின் குறைகளுக்கு மக்கள் பிரதிநிதி தான் பதிலளித்தாக வேண்டும். இந்நிகழ்ச்சியை சீர்குலைக்கவே, அவர் வந்துள்ளார். - குஸ்மா, காங்கிரஸ் உறுப்பினர்� துணை முதல்வர் சிவகுமாரிடம் மைக்கை கொடுங்கள் என கேட்ட முனிரத்னா. � ஜே.பி., பூங்கா வெளியே தர்ணாவில் ஈடுபட்ட முனிரத்னா.