மேலும் செய்திகள்
நாமஸ்மரண் - 2025 நிகழ்ச்சி துவக்கம்
11-Oct-2025
எலஹங்கா: நாமஸ்மரண் - 2025 நிகழ்ச்சி இன்று நிறைவு பெறுகிறது. பெங்களூரு நாமஸ்மரண் சார்பில் மூன்று நாட்கள் நடக்கும், புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி, ஹலசூரு ஏரிக்கரை அருகே உள்ள முதலியார் சங்க ஹாலில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று காலை 9:30 மணி முதல் 12:00 மணி வரை புதுக்கோட்டை விக்னேஷ் பாகவதரின் தோடயமங்களம், குருதியானம் நடந்தது. மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி வரை, சென்னை சத்குரு ஞானாந்த பஜனை மண்டலியின் பஞ்படி, அஷ்டபதி, தாரங்கம் நடந்தது. கோவிந்தபுரம் அரவிந்த் சூடாமணி பாகவதரின் தியான கீர்த்தனைகள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, மதுரை ஸ்ரீ சக்ரம் ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், சுந்தரம் பாகவதர், ராஜசிம்மன் பாகவதர், மும்பை சத்யநாராயணா பாகவதரின் டோலோற்சவம் நடந்தது. ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், பக்தி பாடல்கள் பாடினார். குத்துவிளக்கை சுற்றி பக்தர்கள் நடனமாடினர். இன்றுடன் ஜெயந்தி நிறைவு பெறுகிறது.
11-Oct-2025