உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹரியானாவில் விரைவில் நந்தினி உற்பத்திகள்

ஹரியானாவில் விரைவில் நந்தினி உற்பத்திகள்

பெங்களூரு : ஹரியானா மாநிலத்தில், நந்தினி உற்பத்திகளை அறிமுகம் செய்ய கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தயாராகி வருகிறது.இதுகுறித்து, கே.எம்.எப்., அதிகாரிகள் கூறியதாவது:வட மாநிலங்களில் தன் மார்க்கெட்டை விஸ்தரிக்க, கே.எம்.எப்., திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டில்லி மாநிலங்களில் கே.எம்.எப்.,பின் நந்தினி பிராண்ட் உற்பத்திகள் அறிமுகமாகி, வெற்றிகரமாக விற்பனையாகின்றன. மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.அதே போன்று ஹரியானா மாநிலத்திலும், நந்தினி உற்பத்திகளை அறிமுகம் செய்ய கே.எம்.எப்., தயாராகிறது. விரைவில் ஹரியானாவில், நந்தினி பால் கிடைக்கும்.வட மாநிலங்களில், நந்தினி பால் மற்றும் உற்பத்திகளுக்கு அதிக மவுசு உள்ளது. எனவே இம்மாநிலங்களில் கே.எம்.எப்., படிப்படியாக தன் மார்க்கெட்டை விஸ்தரித்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை