தேங்காய் நார்களில் 30 சதம் மட்டுமே பயன்
பெங்களூரு: ''நம் நாட்டில் கிடைக்கும் தேங்காய் நார்களில் 30 சதவீதம் மட்டுமே உற்பத்திக்காக பயன்படுகிறது,'' என, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஷோபா கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நம் நாட்டில் கிடைக்கும் தேங்காய் நார்களில் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் நார் தொழிலின் மதிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தென்னை நாரிலிருந்து செய்யப்படும் பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.தேங்காய் நார்களிலிருந்து கார்பன் பிரித்தெடுப்பது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. நாரிலிருந்து கார்பன் பிரித்தெடுத்தல், மர பலகைகள் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சிகள் கற்பிக்கப்பட வேண்டும்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை மாநில அளவிலான ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.