உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீரமரணம் அடைந்த வீரருக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரருக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி

தேவனஹள்ளி: பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்து பொது மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.கடந்த வியாழக்கிழமை ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரரும், ஆந்திராவை சேர்ந்தவருமான முரளி நாயக் வீரமரணம் அடைந்தார்.இவரது உடல் புதுடில்லியில் இருந்து நேற்று விமானம் மூலம், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை, ராணுவ வீரர்கள் மரியாதையுடன் சுமந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்.அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஏராளமான பொது மக்கள் கூடினர். சிலர் அவரது புகைப்படத்துக்கு மலர்கள் துாவி அஞ்சலி செலுத்தினர். சிக்கபல்லாபூர், பாகேபள்ளி வழியாக சத்யசாய் மாவட்டத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. வழியில் பாகேபள்ளி சுங்கச்சாவடியில் மக்கள், ஆம்புலன்சை வழிமறித்து மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ