ஜனாதிபதி முர்மு மைசூரு வருகை செப்., 1, 2ல் அரண்மனையில் தடை
மைசூரு: ஜனாதிபதி திரவுபதி வருகையை ஒட்டி, செப்., 1, 2 ம் தேதிகளில் மைசூரு அரண்மனையில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரில் உள்ள அனைத்து இந்திய பேச்சு, கேட்டல் நிறுவனத்தின் வைர விழா, செப்., 1ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருகிறார். அதுபோன்று, மைசூரு மன்னர் குடும்பத்தினர் பிரமோதா தேவி, தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, செப்., 1ம் தேதி அரண்மனைக்கு வருகை தருவதாக உறுதி அளித்து உள்ளார். இதையடுத்து, செப்., 1, 2ம் தேதிகளில் அரண்மனைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அரண்மனை வாரியம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.