உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க கோரி போராட்டம்

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க கோரி போராட்டம்

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையம் அமைக்காததை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.பெங்களூரில் சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வரையிலான நீல நிற மெட்ரோ ரயில் பாதை பணிகள் மும்மரமாக நடக்கின்றன. இந்த பாதையில், 2026ம் ஆண்டு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீல நிற வழித்தடத்தில் பெட்டஹலசூரு, ஹுனசமரனஹள்ளி ஆகிய பகுதிகளுக்கு அருகில் மெட்ரோ நிலையம் அமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பெட்டஹலசூரு, ஹுனசமரனஹள்ளி அருகே உள்ள பகுதிகளில் ரயில்வே நிலையங்கள் அமைக்கப்படவில்லை. அதற்கான பணிகளும் துவங்கவில்லை. இதை கண்டித்து நேற்று அப்பகுதியினர், சிக்கஜாலாவில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் போராட்டம் நடத்தினர்.அவர்கள் கூறியதாவது:இந்த பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை என்றால் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதிக்க மாட்டோம்.போராட்டம் நடத்தினோம். நீல நிற வழித்தடம் மூலம் விமான நிலையத்தை, எளிதில் அடையலாம் என நினைத்தோம். ஆனால், ரயில் நிலையம் கட்டப்படாததால், வரும் காலத்தில் மக்கள் சிரமப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி