உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.சு.மணி நினைவு நுாலக வாசகர் வட்டம்

பா.சு.மணி நினைவு நுாலக வாசகர் வட்டம்

பெங்களூரு: பா.சு.மணி நினைவு நுாலகத்தி ன் வாசகர் வட் டம் நேற்று துவக்கப்பட்டது. கர்நாடக தமிழர்கள் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய, தினச்சுடர் பா.சு.மணி பிறந்தநாளையொட்டி, அவரது பெயரில் கடந்த மாதம் 11ம் தேதி, சிவாஜிநகர் குயின்ஸ் சாலை யில் உள்ள, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நுாலகம் திறக்கப்பட்டது. இந்த நுாலகத்தின் வாசகர் வட்டம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ் ஐ.எப். எஸ்., அதிகாரி வெங்கடேசன் பங்கேற்றார். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை, வாசகர் வட்டம் நிகழ்ச்சி நடக்கும் என, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவர் முத்துமணி கூறினார். நுாலகத்தில் உள்ள புத்தகங்களை, வெங்கடேசன் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ