உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பி.டி.ஓ., இடமாற்றம் நடைமுறை துவக்கம்

பி.டி.ஓ., இடமாற்றம் நடைமுறை துவக்கம்

பெங்களூரு : ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் பி.டி.ஓ.,க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் உள்ள பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் செயல்முறை துவங்கப்பட உள்ளது. இதன் மூலம், ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பி.டி.ஓ.,க்கள் கட்டாயமாக, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர். முதல் கட்டமாக வரும் 10 முதல் 20ம் தேதி வரை நடக்கும். அடுத்த கட்டமாக வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கும். ஆன்லைன் வழியாக இடமாற்றம் செய்யும் பணிகள் நடக்கின்றன. இது, நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிபுரியும் 1,300 உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ