உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராதா கல்யாண மஹோத்சவம் இன்று துவக்கம்

ராதா கல்யாண மஹோத்சவம் இன்று துவக்கம்

பெங்களூரு: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் சார்பில், பெங்களூரில் இரண்டு நாட்கள், ராதா கல்யாண மஹோத்சவம் இன்று துவங்குகிறது. தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷனின், பெங்களூரு ஜே.பி.நகர் கிளை சார்பில், மூன்றாவது ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம் இன்றும், நாளையும் ஜெயநகர் 9வது பிளாக், ஈஸ்ட் என்ட் ஏ மெயின் ரோட்டில் உள்ள, ஸ்ரீராம மண்டலியில் நடக்கிறது. இன்று காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், கல்யாண மஹோத்சவம் துவங்குகிறது. இதை தொடர்ந்து தோடயமங்களம், குருகீர்த்தனை, அஸ்டபதி; மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அஸ்டபதி, பஞ்சபதி பூஜை, திவ்யநாமம் நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி; 9:00 மணிக்கு ராதா கல்யாண மஹோத்சவம், மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு மஹா பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. கல்யாண உத்சவத்தை ஹரிதாசரத்னா ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மற்றும் அவரது குழுவினர் நடத்தி வைக்கின்றனர். விழாவில் பக்தர்கள் பங்கேற்குமாறு பிராமணர் அசோசியேஷன் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை