உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காவிரி கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

காவிரி கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

மாண்டியா:ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளை ஆக்கிரமித்து, கடைகள்,ஹோம் ஸ்டேக்கள் கட்டப் பட்டு இருந்தன. இதுகுறித்து லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பாவிடம், உள்ளூர்வாசிகள் சிலர் புகார் செய்தனர். கடந்த வாரம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வந்த நீதிபதி, காவிரி ஆற்ற ங்கரையோர பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, கடைகள், ஹோம் ஸ்டேக்களை இடித்து அகற்ற, ஸ்ரீரங்கப்பட்டணா தாசில்தார் சேதனாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் தடுக்க, ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளை, அதிகாரிகள், குறியீடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ