உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அமைச்சரவையில் 2 இடம் காலி எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை

அமைச்சரவையில் 2 இடம் காலி எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை

பெங்களூரு: ''அமைச்சரவையில் காலியாக உள்ள இரண்டு இடங்களை, எஸ்.டி., சமூகத்திற்கு வழங்க வேண்டும். இதுபற்றி விவாதிக்க விரைவில் டில்லி செல்கிறோம்,'' என்று, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஒருவர் பதவி, அதிகாரத்தை இழந்து விட்டால் அவர் பின் யாரும் நிற்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அமைச்சர் பதவியை இழந்த ராஜண்ணாவுடன் நாங்கள் இருக்கிறோம். இரண்டரை ஆண்டுகள் அவர் அமைச்சராக பணியாற்றி உள்ளார். கட்சி மேலிடத்திடம் சிலர் ராஜண்ணாவை பற்றி தவறாக சொல்லி வைத்து உள்ளனர். இதனால் மேலிடத்திடம் அவர் மீது தவறான கருத்து உள்ளது. நான் உள்ளிட்ட எஸ்.டி., சமூக தலைவர்கள் விரைவில் டில்லி சென்று, மேலிட தலைவர்களை சமாதானம் செய்வோம். நாகேந்திரா ராஜினாமா, ராஜண்ணாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியதால், அமைச்சரவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இரு இடங்களையும் எஸ்.டி., சமூகத்திற்கு வழங்க வேண்டும். இதுபற்றி மேலிட தலைவர்களிடம் விவாதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி