மேலும் செய்திகள்
தங்கவயலை ரவுடிகள் இல்லா நகரமாக்க திட்டம்
22-Dec-2025
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி அலுவலகம் எதிரே, நடைபாதை மற்றும் சாலையில் உள்ள கடைகளை அகற்றுமாறு, சுகாதார அதிகாரி மங்களகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராபர்ட்சன்பேட்டை பி.எம்.சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே, நடைபாதையில் பழக்கடைகள், காய்கறிகள் உட்பட பல்வேறு கடைகள் நடத்தப்படுகின்றன. வாகனங்களில் வந்து பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றனர் என, சிலர் நகராட்சிக்கு புகார் அனுப்பி உள்ளனர். இதனால், நேற்று நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி மங்கள கவுரி, 'நடைபாதைகளில் கடைகள் நடத்தக்கூடாது. மீறினால், அபராதம் விதிக்கப்படும். அங்குள்ள விற்பனை பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்' என்று எச்சரித்தார். நடைபாதை கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தார்.
22-Dec-2025