உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நண்பரின் மனைவிக்கு தொல்லை தந்த ரவுடி கைது

நண்பரின் மனைவிக்கு தொல்லை தந்த ரவுடி கைது

ஓமலுார்: தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், 23 வயது பெண், 3 ஆண்-டுக்கு முன், கணவர் வீட்டில் இருந்தார். அப்போது அருகே வசித்த, கணவரின் நண்பர் திருநாவுக்கரசு, 28, என்பவர் வந்து சென்றார். தொடர்ந்து திருநாவுக்கரசு போனில் பேச ஆரம்பித்-ததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.இதனால் திருநாவுக்கரசு மொபைல் எண்ணை, அப்பெண், 'பிளாக்' செய்தார். ஆனால் திருநாவுக்கரசு, அவரது நண்பர்கள் மொபைல் மூலம் அடிக்கடி பேசி தொந்தரவு செய்தார். கடந்த, 6ல், அப்பெண் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரித்து நேற்று திருநாவுக்கரசை கைது செய்தனர். அவர் மீது, 3 வழக்-குகள் இருப்பதும், அவர் ரவுடி பட்டியலில் இருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ