உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.6,826 கோடியில் 147 திட்டங்கள் ஒற்றை சாள ர குழு ஒப்புதல்

ரூ.6,826 கோடியில் 147 திட்டங்கள் ஒற்றை சாள ர குழு ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவில் 6,826 கோடி ரூபாய் மதிப்பிலான 147 திட்டங்களுக்கு, ஒற்றைச் சாள ர குழு ஒப்புதல் அளித்து இருப்பதாக, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளார். கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தன் துறை அதிகாரிகளுடன் விதான் சவுதாவில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: பெங்களூருக்கு அப்பால் தொழில்துறை வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில், மாநில அளவிலான ஒற்றைச் சாள ர குழு 6,826 கோடி ரூபாயில் 147 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் மாநிலத்தில் 18 ஆயிரத்து, 600 வேலைவாய்ப்புகள் உருவாகும். இது பிராந்திய அளவிலான தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த திட்டங்கள் உணவு பதப்படுத்துதல், ஜவுளி, தரவு மையங்கள், குறைக் கடத்திகள், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியவை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில், தொழில் துறை முதன்மை செயலர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை