மேலும் செய்திகள்
இன்று இனிதாக...
23-Nov-2025
பானஸ்வாடி: சிக்கபானஸ்வாடி ஆஸ்திகா சமாஜ் கல்யாண நகர் சார்பில், வரும், 20, 21ம் தேதிகளில் பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள சீதா ராமா கல்யாண மண்டபத்தில் சாஸ்தா பிரீத்தி நடக்கிறது. முதல் நாளான, 20ம் தேதி, மாலை 4:30 முதல் 5:30 மணி வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், கல்யாண் நகர் பஜனை மண்டலி சார்பில் பஜனை; 6:00 முதல் இரவு 9:30 மணி வரை சம்பரதாயம் மற்றும் மும்பை ஸ்ரீஹரி பாகவதர் குழுவினரின் அய்யப்பன் பஜனை நடக்கிறது. இரண்டாம் நாளான, 21ல், அதிகாலை 5:30 மணிக்கு வேதமூர்த்தி பிரம்மஸ்ரீ ராமா வாத்தியார் மஹா கணபதி ஹோமம் நடத்துகிறார். 7:30 மணிக்கு மஹன்யாசம், ருத்ராபிஷேகம், கிராமார்ச்சனை, அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சனை, சாஸ்தா பிரீத்தி, மஹா மங்களாரத்தியை பிரதோசம் பூஜை குழுவினர் நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து சாஸ்தா வரவு பாட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
23-Nov-2025