உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அதிர்ச்சி! 41,392 அரசு பள்ளிகளில் குறையும் சேர்க்கை விகிதம்: 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பது 8ல் தான்

அதிர்ச்சி! 41,392 அரசு பள்ளிகளில் குறையும் சேர்க்கை விகிதம்: 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பது 8ல் தான்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 41,392 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கடுமையாக குறைந்துள்ளது. வெறும் எட்டு பள்ளிகளில் மட்டுமே 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பது, கல்வி துறையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.கர்நாடகாவில் கொரோனா பரவலுக்கு இடையே, கடந்த மாதம் 29ம் தேதி அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் 'மாஸ்க்' அணிந்து வரவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது.

கட்டணம் அதிகம்

இதற்கிடையில், நடப்பாண்டில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல பெற்றோர், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்தனர்.மொத்தம் 300க்கும் மேற்பட்ட புகார்களில், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளே அதிகம் சிக்கின. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதியளித்தும், பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆர்வம் இல்லை

இதனால், பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், அரசு பள்ளிகளில் சேர்ப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அரசுப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல முயற்சிகளை எடுத்தனர்.ஆனால், கற்றல் குறைபாடு, அடிப்படை வசதிகள் இல்லாததால், தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகள் சேர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது.கர்நாடகாவில் துவக்க, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 41,392 அரசுப் பள்ளிகள் உள்ளன. நடப்பாண்டில், பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் வழக்கத்தை விட குறைவாக இருந்துள்ளது.வெறும் எட்டு பள்ளிகளில் மட்டுமே, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை மற்றும் எழுத்தறிவுத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

நம்பிக்கை

இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் 'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கான நிதியை ஒதுக்குவதில், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது.இதற்கு காரணம், மாணவர் சேர்க்கை விகிதம் குறைவே. இதனால், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களை சேர்ப்பதற்கான அவகாசம் ஜூலை இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எண்ணிக்கை விபரம்

மாணவர்கள் பள்ளிகள்1 முதல் 30 16,07531 முதல் 100 14,703101 முதல் 250 8,028251 முதல் 1,000 2,5781000க்கும் மேல் 8

மாணவர் சேர்க்கை சரிவுக்கு காரணங்கள்

* தொடர் கதைகழிப்பறைகளை மாணவர்களை சுத்தம் செய்ய வைக்கும் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, துவக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பல முறை எச்சரித்தும், அதுபோன்ற அவலங்கள் தொடர்வது...* கழிப்பறை பற்றாக்குறைமாநிலத்தில் உள்ள 3,580க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், கழிப்பறைகளே இல்லை. 4,000 பள்ளிகளில் கை கழுவும், குடிநீர் வசதி இல்லை என ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.* ஆசிரியர் இல்லைஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இன்றியமையாத விஷயமாக உள்ளது. இதை தீர்க்க, கடந்த மாத இறுதியில், 51,000 ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ