உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை பொருள் விற்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு: பெங்களூரு போலீசார் நடவடிக்கை

போதை பொருள் விற்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு: பெங்களூரு போலீசார் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹொஸ்கோட்: போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற, போதை பொருள் விற்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் சுங்கச்சாவடி அருகே, மூன்று வாலிபர்கள் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இது குறித்து ஹொஸ்கோட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்கிற்கு தகவல் கிடைத்தது. போலீஸ்காரர்களுடன், சுங்க சாவடி அருகே இன்ஸ்பெக்டர் அசோக் ஜீப்பில் சென்றார். அப்போது போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர், தன் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இரண்டு போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்பினார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் அசோக், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அந்த நபர் சரண் அடையவில்லை. இதனால் அவரை நோக்கி இன்ஸ்பெக்டர் அசோக் துப்பாக்கியால் சுட்டார். அவரது வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் சுஹைல், (வயது 27) என்பது தெரிந்தது. தாக்குதலுக்கு ஆளான இரண்டு போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

skv srinivasankrishnaveni
ஆக 10, 2024 08:35

இளையவர்களையே குறிவச்சு அளிக்கும் இந்த நாசவேலைக்காராளை வேரோடு அழிக்கவேண்டும் இந்தமாதிரியேதான் திமுக அண்ட் திமுகவை வளர வச்சு விஷவிருட்ச்சங்களாயாச்சு தமிழ்நாடு செத்துப்போயாச்சு கர்நாடகம் ஆந்திராவையும் குறியாவாச்சு அழிச்சுட்டா போதும் என்று அலையும் நாசவேலை செய்யும் NAAYKAL


வாய்மையே வெல்லும்
ஜூலை 17, 2024 20:22

சுஹைல் .. அய்யகோ அமைதிக்கே பங்கமா? நீங்க சொகுசாக வாழ ஒரே இடம் பெரியாறு நாடு இங்க வந்து நினைச்ச போல அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் உங்களை யாரும் சீண்டமாட்டார்கள் .. தோழமை சூட்டுதல் நடக்கவே நடக்காது இதுக்கு கருஞ்சட்டை சிறுத்தை உத்திரவாதம் ..


Barakat Ali
ஜூலை 17, 2024 19:23

விசாரணையில் அவரது பெயர் சுஹைல், வயது 27 என்பது தெரிந்தது. இதனால் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள் ..... ஹராம் என்று சொல்லிவிட்டு அதையே பெரும்பான்மையினருக்கு விற்றால் என்ன நினைப்பார்கள் ????


Ramesh Sargam
ஜூலை 17, 2024 17:34

சுஹைல், பெயரே சொல்லிவிடுகிறது அவன் எப்பேற்பட்டவன் என்று. அவர்களுக்கு அரசியல்வாதிகள் ஆதரவு கட்டாயம் இருக்கும். அவர்களை சுட்டு பிடித்து தண்டிக்கவேண்டும்.


ganapathy
ஜூலை 17, 2024 17:20

போதைப்பழக்கத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா?


Pandi Muni
ஜூலை 17, 2024 19:35

இதிலென்ன சந்தேகம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை