மேலும் செய்திகள்
சமையல் அறை டூ உணவு டெலிவரி பணி
28-Apr-2025
பெங்களூரு : பாகல்கோட் மாவட்டம் இளகல்லை சேர்ந்தவர் ஷாலினி. இவரும், கே.ஜி.,ஹள்ளி போலீஸ் நிலைய எஸ்.ஐ., நாகராஜும் சிறு வயதில் இருந்தே பள்ளியில் நண்பர்களாக இருந்தனர்.படிப்பு முடித்த ஷாலினிக்கு திருமணமானது. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆனாலும், நாகராஜ் போலீசாக முயற்சிப்பதற்காக, நிதியுதவி வழங்கி வந்தார். எஸ்.ஐ.,யான நாகராஜ், ஷாலினியை காதலித்து வந்தார். இதை அறிந்த ஷாலினி, தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று, 2024 ஆகஸ்டில் நாகராஜை திருமணம் செய்து கொண்டார்.பெங்களூரு எச்.பி.ஆர். லே - அவுட்டில் வசித்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் நாகராஜ், மனைவியை விட்டு, தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். கணவர் வீட்டுக்கு வராததால் அதிருப்தியில் இருந்த ஷாலினி, நேற்று முன்தினம் இரவு கணவருக்கு போன் செய்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொள்வதாக மிரட்டி உள்ளார்.இந்நேரத்தில் தண்டவாளத்தில் ஷாலினி நின்றிருப்பதை, ஹொய்சாளா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை மீட்டு, அறிவுரை கூறி, வீட்டில் விட்டு விட்டு சென்றனர். ஆனாலும், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோவிந்தபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையில், ஷாலினியின் கணவர் நாகராஜிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஷாலினிக்கு, முதல் கணவர் மூலம் 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
28-Apr-2025