உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.ஐ., மனைவி தற்கொலை

எஸ்.ஐ., மனைவி தற்கொலை

பல்லாரி:எஸ்.ஐ., மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாரி மாவட்டம், மோக்கா போலீஸ் நிலைய எஸ்.ஐ., கே.கலிங்கா. இவரது மனைவி சைத்ரா, 36. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சகோதரர்கள் சமீபத்தில் உயிரிழந்ததா ல் சைத்ரா மனநிலை பாதிக்கப்பட்டார். இதற்காக, ஷிவமொக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக கணவர் கலிங்காவுடன், இரண்டு குழந்தைகளும் மைதானத்துக்கு சென்றனர். வீட்டில் சைத்ரா மட்டும் தனியாக இருந்தார். கலிங்கா தன் குழந்தைகளுடன் வீடு திரும்பினார். வீட்டில் சைத்ரா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ந்தார். சைத்ரா சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !