உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஸ்பா உரிமையாளர் கடத்தல் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்

 ஸ்பா உரிமையாளர் கடத்தல் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்

எலக்ட்ரானிக் சிட்டி: திரைப்பட பாணியில் காரில் பின் தொடர்ந்த மர்ம கும்பல், ஸ்பா உரிமையாளரை கடத்தி சென்றது. பணம் கேட்டு அவரது குடும்பத்தினரை மிரட்டி வருகிறது. பீஹாரை சேர்ந்தவர் அஷீத் ஜா, 29. இவர் பெங்களூரின் திருப்பாளையாவில் வசிக்கிறார். பேகூரின் அக்ஷயா நகரில் ஸ்பா நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் பணி முடிந்த பின், ஸ்பாவை மூடிவிட்டு, மேலாளர் மனுகுமாருடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். எலக்ட்ரானிக் சிட்டியின் பெட்டதாசனபுரா அருகே செல்லும் போது, திரைப்பட பாணியில் மர்ம கும்பல் ஒன்று காரில் பின் தொடர்ந்து வந்து, பைக் மீது மோதியது. கீழே விழுந்த இருவரையும் மர்மகும்பல் இரும்பு தடியால் தாக்கியது. அப்போது, மனுகுமார் காயங்களுடன் தப்பியோடி விட்டார். அஷீத் ஜாவை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்போம். இல்லாவிட்டால் கொலை செய்வதாக மிரட்டினர். இதற்கிடையே காயங்களுடன் ஓடிய மனுகுமார், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நடந்த சம்பவம் குறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கடத்தல்காரர்களை தேடுகின்றனர். இதற்காக மூன்று போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !