உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி மரத்தில் சிக்கியிருந்த மாணவி மீட்பு

ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி மரத்தில் சிக்கியிருந்த மாணவி மீட்பு

மாண்டியா:பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் வசிப்பவர் பவித்ரா, 19. இவர் சட்ட கல்லுாரியில் படித்து வருகிறார். வீட்டில் பெற்றோருடன், ஏதோ காரணத்தால் மனஸ்தாபம் ஏற்பட்டது. மனம் நொந்த அவர், நேற்று முன் தினம் வீட்டை விட்டு வெளியேறினார்.மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா சென்றார். இத்தாலுகாவின் ஹங்கரஹள்ளி கிராமத்தின் அருகில் பாயும் காவிரி ஆற்றில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் குதித்தார். சில நாட்களாக மழை பெய்ததால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஆற்றில் விழுந்த பவித்ரா, பல கி.மீ., துாரம் அடித்துச் செல்லப்பட்டார். இடையே ஆற்றின் மத்தியில் இருந்த மரத்தில் சிக்கிக்கொண்டார்.மரத்தின் மீதே இரவை கழித்த அவர், நேற்று காலை உதவி கேட்டு கூச்சலிட்டார். அப்போது ஆற்றங்கரையில் இருந்த விவசாயிகள், ஆற்றின் நடுவில் இளம்பெண் இருப்பதை கவனித்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த அரகெரே போலீசார், தீயணைப்புப் படையினர், பவித்ராவை காப்பாற்றி, படகில் கரைக்கு அழைத்து வந்தனர். பெங்களூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி