உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லால்பாக் பூங்காவில் சுரங்கப்பாதை சமூக ஆர்வலர்கள் போராட்டம்

 லால்பாக் பூங்காவில் சுரங்கப்பாதை சமூக ஆர்வலர்கள் போராட்டம்

பெங்களூரு: சுரங்கப்பாதை திட்டத்திற்கு லால்பாக் பூங்காவை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்பு நல சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். பெங்களூரு சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து, ஹெப்பா ல் வரை 16.7 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்க லால்பாக் பூங்காவில் குறிப்பிட்ட இடம் தேவை ப்படுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லால்பாக் பூங்காவில் நேற்று பல்வேறு குடியிருப்பு சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கூறியதாவது: லால்பாக் பூங்காவின் நிலத்தை பயன்படுத்துவதற்காக கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. லால்பாக் பூங்காவில், 5 சதவீத இடத்தை அல்ல; ஒரு அங்குலத்தை கூட விட்டுத்தர மாட்டோம். பெங்களூரின் அழகான இயற்கை வளம் நிறைந்த பூங்காவின் அழகை பாழாக்க விட மாட்டோம். பூங்காக்களால் மட்டுமே சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். வெப்பம், காற்று மாசுபடுதலை பூங்காக்களால் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை