உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மத்திய அரசு முடிவுக்கு ஏற்ப கரும்பு விலை நிர்ணயம்

மத்திய அரசு முடிவுக்கு ஏற்ப கரும்பு விலை நிர்ணயம்

பெலகாவி: ‘‘சர்க்கரையின் குறைந்தபட்ச கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும். அதன் அடிப்படையில் கரும்புக்கான விலையை நிர்ணயிக்க, சர்க்கரை ஆலைகள் முடிவு செய்துள்ளன,’’ என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். அவர் பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி: சர்க்கரையின் குறைந்தபட்ச கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும். அதன் அடிப்படையில் கரும்புக்கான விலையை நிர்ணயிக்க சர்க்கரை ஆலைகள் முடிவு செய்துள்ளன. ஒரு டன்னுக்கு எவ்வளவு விலை கொடுப்பர் என்பதை ஆலைகளே எங்களுக்கு தெரிவிக்கும். கடந்த, 10 ஆண்டுகளாக மத்திய அரசு, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தாததால், கரும்பு விவசாயிகளின் பிரச்னை எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும், விவசாயிகளின் அவல நிலையை புரிந்து கொள்கிறார். குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக ஜோஷி உறுதி அளித்துள்ளார். அவர், ஒரு குழுவையும் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி, நான் பெலகாவி வந்து இரண்டு நாட்கள் கூட்டத்தை நடத்தி உள்ளேன். இந்த போராட்டத்தால், கரும்புக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்நாட்டின் சொத்து. அவர்கள் வாழ வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இரண்டு நாட்களாக இரவு, பகலாக கூட்டம் நடத்தி, இந்த பிரச்னையை தீர்க்க முயன்றேன். விவசாய பிரதிநிதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் மனுக்களை கேட்டறிந்தேன். தொழிற்சாலை உரிமையாளர்கள், ‘எங்களுக்கு பிரச்னை இருக்கிறது. எங்கள் வங்கி இருப்பு நிலை குறிப்பை பாருங்கள். தேவைப்பட்டால் எங்களின் நான்கு அல்லது ஐந்து தொழிற்சாலையை அரசிடம் ஒப்படைக்கிறோம். அவற்றை நீங்களே நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர். கடந்த காலத்தில் மாண்டியாவில் விவசாயிகள் தொழிற்சாலைகளை நடத்தி, பிரச்னைகளை சந்திப்பதை பார்த்திருக்கிறேன். நாங்கள் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் உட்பட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறோம். கரும்பு விவசாயிகளுக்காக மத்திய அரசை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி