உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஊடகங்கள் முன் எதுவும் பேசாதீர்கள் பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவு

ஊடகங்கள் முன் எதுவும் பேசாதீர்கள் பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவு

பெங்களூரு: 'கட்சியில் நடக்கும் பிரச்னை குறித்து ஊடகங்கள் முன் வெளிப்படையாக எதுவும் பேசாதீர்கள்' என, கர்நாடக பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மற்றும் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் இடையிலான மோதல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விஜயேந்திராவை பற்றி தினமும் ஊடகங்கள் முன், எத்னால் பேசி வருவது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் கர்நாடக பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக்குடன் மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.பின், சுதாகர் ரெட்டி அளித்த பேட்டி:நம் கட்சியின் தலைவர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக எதுவும் பேச வேண்டாம். இது யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை. எல்லாருக்குமான செய்தி இது. கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் முக்கிய நபர்கள். கட்சிக்குள் நடக்கும் பிரச்னை குறித்து, ஊடகங்கள் முன்பு பகிரங்கமாக பேசுவதை பார்த்தேன்.நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கீழ் பணியாற்றி வருகிறோம் என்பதை மறந்து விட வேண்டாம். பல்வேறு மாநிலங்களில் கட்சியின் அமைப்பு தேர்தல் முடிந்துவிட்டது. அங்கு என்ன நடைமுறையோ அதே தான் இங்கும் பின்பற்றுகிறோம். பல மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.நம் பிரச்னையை கட்சிக்குள் நான்கு சுவர்களில் அமர்ந்து விவாதியுங்கள். ஊடகங்கள் முன் எதுவும் பேசாதீர்கள். மாநிலத்தில் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு உள்ளது. ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை