தேஜஸ்வி சூர்யாவுக்கு கன்றுக்குட்டி பரிசு
பெங்களூரு: தன் வீட்டுக்கு புதிதாக வந்த கன்றுக்குட்டியை, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும், அவரது மனைவியும் வரவேற்றனர்.பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும், அவரது மனைவி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு இவர்களுக்கு அழகான கன்றுக்குட்டியை ஆந்திர பா.ஜ., தலைவர் வம்சி கிருஷ்ணா பரிசளித்தார். இதை தேஜஸ்வி சூர்யாவும், அவரது மனைவியும் மகிழ்ச்சியுடன் பெங்களூருக்கு கொண்டு வந்தனர்.நேற்று முன் தினம், தங்கள் வீட்டுக்கு வந்த கன்றுக்குட்டியை, சிவஸ்ரீ பாட்டு பாடி வரவேற்றார். இந்த வீடியோவை, தேஜஸ்வி சூர்யா தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கன்றுக்குட்டியை லட்சுமி, ராதா, கவுரி என, பெயரிட்டு அழைக்கின்றனர். தங்களின் வீட்டிலேயே வளர்க்க முடிவு செய்துள்ளனர்.