உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விதான் சவுதாவில் பயங்கரவாதிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி பகீர்

விதான் சவுதாவில் பயங்கரவாதிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி பகீர்

பெங்களூரு: ''பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது போன்று, விதான் சவுதாவிலும் பயங்கரவாதிகள் உள்ளனர்,'' என, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி பகீர் தகவல் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பரப்பன அக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி, பாலியல் வன்கொடுமை குற்றவாளி உள்ளிட்டோர் கையில் மொபைல் போன் கொடுத்து, ராஜ உபசாரம் அளிக்கின்றனர். சிறையில் இருப்பவர்களை விட, விதான் சவுதாவில் ஆபத்தான பயங்கரவாதிகள் உள்ளனர். விவசாயிகளை குண்டர்களை வைத்து மிரட்டி, நிலத்தை பறிப்பவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? முந்தைய பா.ஜ., அரசு மீது சுமத்திய 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை, இவர்களால் நிரூபிக்க முடியவில்லை. பிடதியில் டவுன்ஷிப் அமைக்க நிலம் பெற, விவசாயிகளை ஒவ்வொரு நாளும் மிரட்டுகின்றனர். எனக்கு விவசாயிகள் அரசியல்ரீதியாக நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளனர். கஷ்ட காலத்தில் அவர்களுடன் நிற்பது என் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை