உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

யாருக்கு சிறை மத்திய கூட்டுறவு வங்கியில் 'மெகா' தேர்தல் நடப்பதாக புல்லுக்கட்டு, பூக்காரங்க புகார்களை அடுக்கினாங்க. மத்திய அரசின் நிதியுதவி கொள்ளை போகுதேன்னு கலங்கினாங்க. ஆனால் கூச்சல் போட்டவங்க வாயை மூட, அல்வா கொடுப்பது போல பணக்கட்டுகளை வாயில் திணிச்சிட்டாங்களோ. கை கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள உட்கட்சி மோதல், விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்லாரி இரும்பு கனிம ஊழலை விசாரித்த சீனியர் ஆபீசர் தான், இந்த வங்கி ஊழலையும் விசாரிக்க அரசு நியமிச்சிட்டாங்க. 11 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியிருக்குன்னு லோக் ஆயுக்தா ஆபீசரு, பீரங்கி போல வெடிச்சிட்டாரு.இந்த வழக்கில் சிக்கினவங்க, பல்லாரிகாரர் போல சிறையில் அடைய வேண்டியது தான். கண்ணை தொறக்கணும்கர்நாடகாவில 224 அசெம்பிளிக்காரங்க, 28 செங்கோட்டைக்காரங்க இருந்தும் பல காரணங்களை சொல்லி 'மைன்சை' மூடினாங்க. அதே கோல்டு சிட்டியில், மண் வாரி இயந்திரங்கள் உற்பத்தி செய்ற தொழிற்சாலையின் 'மெட்ரோ கோச்' பிரிவை, வேறு மாநிலத்திற்கு கொண்டு போறதா அறிவிச்சிருக்காங்க. மாநில தொழில் வளம் பற்றி அக்கறை உள்ள சிலர் மட்டுமே, எதிர்த்து சிகப்பு கொடி காட்டுறாங்க.இது ஒருபுறம் இருக்க, அடுத்து கேபிடல் சிட்டியில் உள்ள 'விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையையும்' ஆந்திராவுக்கு மாற்ற பிளான் போடுறாங்க. அப்படின்னா, இந்த மாநில பெருமையை காட்டுற தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக வெளியேறுமோ. உள்ளூரில் நீர், நிலம், மனித வளம் இருக்கும் போது பெரிய தொழில் நிறுவனங்களை பறிபோகும் நிலையை தடுப்பாங்களா அல்லது கண்ணை மூடிக் கொள்வாங்களா.மெகா கூட்டணிமாநிலத்தில் உள்ள எல்லா முனிசி.,களுக்கும் நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த அரசு, தயாரா இருக்குதாம். இதுல, கோல்டு சிட்டி முனிசியின் கவுன்சிலுக்கும் தேர்தல் நடக்கும் என்பதால், 'கை' கூடாரத்துக்கு எதிராக, மத்தவங்கள ஒருங்கிணைக்கிற ஒரு 'மெகா' கூட்டணி தயாராகுது. இதுல, மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிங்க, பண பலம் உள்ளவங்கள ஒண்ணு சேர்க்கும் வேலையை ஆரம்பித்திருக்காங்க. 'மாஜி' நகர தந்தையாக இருந்தவங்க, மிகுந்த ஆர்வமா இருக்காங்க. ஏன்னா... கிராமத்துகாரங்க, கோல்டு சிட்டிக்காரங்க அசெம்பிளிக்கு போவதற்கு ஏத்துக்கிறதா தெரியல. சிலரின் இருபது ஆண்டுகளின் அனுபவம் குத்துதல், குடைச்சலை நினைவு படுத்துகிறது.இனி எதிர்காலம் முனிசி., ஒண்ணு மட்டும் தான். இதையும் இழந்தா அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட வேண்டியது தான். எனவே 'நகரத்தை' பிடிக்க, போட்டி போட வேண்டியதாக உள்ளது. எனவே 35 வார்டுகளிலும் ஒருமித்த கூட்டணியில் வேட்பாளரை களம் இறக்க போறாங்களாம்.பணம் மட்டும் தானா? பள்ளிகள் திறப்புக்கு முன்னதாகவே அட்மிஷன் நடந்தாச்சு. பல பள்ளிகளின் கல்லாப்பெட்டி நிரம்பியாச்சு. இவங்க கல்வித் தரத்தின் மீதும் கவனம் செலுத்தணுமே. வாங்குற கட்டணத்துக்கு 75 சதவீத தேர்ச்சி கிடைக்க வேணாமா.கல்வித் துறை ஆபீசர்கள் 'விசிட்' பெயரில் வேட்டை நடத்துறாங்க. அரசு பர்மிஷன் இல்லாம, எந்த ஒரு தடையும் இல்லாம பள்ளிங்க புத்தகம், சீருடை விற்பனை நிலையமாக மாறி வருது இதுக்கெல்லாம் 'ஜிஎஸ்டி' கிடையாதோ. வட்டார கல்வித் துறை அலுவலகம் அருகில் உள்ள அரசுப் பள்ளி எப்போது இடிந்து விழப்போகுதோ. ஆபத்தில் இருக்கிற இந்த கட்டடத்தைப் பற்றி யார் எப்போது நடவடிக்கை எடுக்க போறாங்களோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை