உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விவேக்நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் வரும் 4ம் தேதி ஆண்டு விழா துவக்கம்

 விவேக்நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் வரும் 4ம் தேதி ஆண்டு விழா துவக்கம்

விவேக் நகர்: விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயத்தின் ஆண்டு விழா, வரும், 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பெங்களூரு விவேக் நகர் குழந்தை இயேசு ஆலய திருவிழா வரும், 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான, 4ம் தேதி மாலை 5:45 மணிக்கு கொடியை, பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். மறுநாளான 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் காலை 5:45, 11:15, மதியம் 1:00, மாலை 6:00 மணிக்கு தமிழிலும்; காலை 6:30, மாலை 5:00 மணிக்கு ஆங்கிலத்திலும்; காலை 8:00, 10:00, மதியம் 2:00 மணிக்கு கன்னடத்திலும்; காலை 9:00 மணிக்கு தெலுங்கிலும்; மதியம் 3:00 மணிக்கு மலையாளத்திலும்; மாலை 4:00 மணிக்கு கொங்கனியிலும் திருப்பலி நடக்கிறது. தினமும் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் 6:00 மணி வரையிலும் பாவ சங்கீர்த்தனம் நடக்கிறது. அருட்தந்தையர் டேவிட் ஜான், பிச்சை முத்து ஆகியோர் மறையுரையாற்றுகின்றனர். வரும், 10ம் தேதி காலை 11:15 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு கன்னடத்திலும், 11:30 மணிக்கு தமிழிலும் கூட்டுத்திருமணம், வெள்ளி விழா, பொன் விழா நடக்கிறது. அன்று காலை 5:45, 8:30, மதியம் 1:00, மாலை 6:00 மணிக்கு தமிழிலும்; காலை 7:00, மாலை 5:00 மணிக்கு ஆங்கிலத்திலும்; மதியம் 2:00 மணிக்கு கன்னடத்திலும்; 3:00 மணிக்கு மலையாளத்திலும்; மாலை 4:00 மணிக்கு கொங்கனியிலும் திருப்பலி நடக்கிறது. வரும் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும், 'வார்த்தை மனுவுருவானவர், இறை இரக்கத்தின் அருனடையாளம், அமைதி தரும் தெய்வம், விசுவாசத்தை தரும் தெய்வம், தாழ்ச்சியை கற்றுத்தரும் தெய்வம், குணமளிக்கும் தெய்வம், துாய குடும்பத்திற்கு அடித்தளம், தன் பேரொளிக்கு அழைக்கும் தெய்வம், 'நம்மோடு வாழும் தெய்வம்' என்ற தலைப்புகளில் நவநாள் ஆன்மிக கருத்துக்கள் இடம் பெறுகின்றன. பெருவிழா நாளான வரும் 14ம் தேதி காலை 5:00 மணிக்கு தொண்டர்களுக்கு சிறப்பு திருப்பலி; காலை 5:45, 8:30, 11:30, மாலை 5:00 மணிக்கு தமிழிலும்; காலை 5:45, 7:15, மாலை 4:00 மணிக்கு ஆங்கிலத்திலும்; காலை 6:30, 10:00, மதியம் 1:00 மணிக்கு கன்னடத்திலும்; 2:00 மணிக்கு மலையாளத்திலும்; 3:00 மணிக்கு கொங்கனியிலும்; மாலை 4:00 மணிக்கு ஆங்கிலத்திலும் திருப்பலிகள் நடக்கின்றன. மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரை, பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் அர்ச்சித்து துவக்கி வைக்கிறார். அதன் பின், தமிழில் திருப்பலி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ