| ADDED : நவ 25, 2025 06:04 AM
மைசூரு: கர்நாடகாவில், பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் பயணிக்க, 'சக்தி' திட்டம் அமலில் உள்ளது. நேற்று முன்தினம், மைசூரு - துமகூரு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ஏறிய ஒரு பெண், துமகூரு செல்ல, 'பூஜ்ய' டிக்கெட் பெற்றுக் கொண்டார். பஸ், ஸ்ரீரங்கபட்டணா பஸ் நிலையத்தில் நின்றபோது, அப்பெண் பஸ்சில் இருந்து இறங்கினார். இதை பார்த்த நடத்துநர் கேள்வி எழுப்பினார். அதற்கு அப்பெண், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால், நடத்துநரின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். அங்கிருந்தோர் நடத்துநருக்கு ஆதரவாக பேசியும், அப்பெண் கேட்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதற்கு, 'சக்தி' திட்டம் அறிமுகமானதில் இருந்து நடத்துநர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பணியில் இருக்கும் அரசு ஊழியர் மீது கை வைக்க, அப்பெண்ணுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 'நெட்டிசன்கள்' கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சக்தி திட்டம் அமலானதில் இருந்து இலவச டிக்கெட்டில், பெண்கள் முறைகேடு செய்கின்றனர். நெடுந்துாரத்துக்கு டிக்கெட் எடுக்கும் பெண்கள், பாதி வழியில் இறங்கி விடுகின்றனர். இதனால் செக்கிங் இன்ஸ்பெக்டர் பரிசோதிக்கும் போது பயணியர் எண்ணிக்கை சரியாக இல்லாவிட்டால் நடத்துனர்கள் வேலை இழக்கின்றனர். - ஆனந்த், தலைவர், போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்நடத்துநரின் காலரை பிடித்து இழுத்த பெண்.