| ADDED : நவ 19, 2025 09:00 AM
தவறில்லை தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பை விட பெரியது அல்ல. பீஹார் தேர்தல் தோல்வி குறித்து, காங்கிரஸ் கட்சி மேலிடம் விசாரிக்கும். நவம்பர், டிசம்பர் புரட்சி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் கட்சியின் உறுப்பினர்கள். அமைச்சர் பதவிக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை. எம்.பி.பாட்டீல், , கனரக, நடுத்தர தொழில்கள் துறை. இது சரியா? பீஹார் தேர்தலில் 90 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் அளவிற்கு என்ன சாதித்தது? அங்கு ஓட்டு மோசடி நடந்துள்ளது. 84 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. வாக்காளர் சீர்திருத்தத்தில் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு பெண்களின் வங்கிக் கணக்குகளில் 10,000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இது சரியா? சந்தோஷ் லாட், அமைச்சர், தொழிலாளர் நலன் துறை. புரட்சி கிடையாது நவம்பர் புரட்சி என்று எதுவும் கிடையாது. முதல்வர் சித்தராமையா மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து என்ன பேசினார் என்பது தெரியாது. கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து முதல்வரிடம் பேச உள்ளேன். முதல்வர், துணை முதல்வர் மாற்றம் குறித்து எதுவும் தெரியாது. ராமலிங்க ரெட்டி, அமைச்சர், போக்குவரத்து துறை. தெரியவில்லை துமகூருக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பதை தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இது வளர்ச்சிக்கான திட்டம். இதில், சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. கர்நாடகாவின் வளர்ச்சியே முக்கியம். இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறோம். பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை.