உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரசின் போராட்டம் காரணமாக பெங்களூரில் போக்குவரத்து மாற்றம்

காங்கிரசின் போராட்டம் காரணமாக பெங்களூரில் போக்குவரத்து மாற்றம்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டதாக குற்றஞ்சாட்டி, பெங்களூரில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதை முன்னிட்டு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரின், சுதந்திர பூங்காவில், இன்று ராகுல் தலைமையில் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பர். இதனால் பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்கும் நோக்கில், சில சாலைகளில் வாகன போக்குவரத்தை போலீசார் தடை செய்துள்ளனர். மாற்று சாலைகளை பயன்படுத்தும்படி பொதுமக்களை கேட்டுக் கொண் டுள்ளனர். இதுகுறித்து, பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: சாந்தலா ஜங்ஷன், கோட் சதுக்கம், ஆனந்தராவ் மேம்பாலம், ஓல்டு ஜே.டி.எஸ்., சாலை, சேஷாத்ரிபுரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளுக்கு மாற்றாக, லுலு மால், ராஜிவ்காந்தி சதுக்கம், மந்த்ரி மால், ஸ்வஸ்திக் சதுக்கம், நேரு சதுக்கம், ரேஸ்கோர்ஸ் மேம்பாலம் சாலைகளை பயன் படுத்தலாம். மைசூரு வங்கி பகுதி யில் இருந்து, சாளுக்யா சதுக்கத்துக்கு செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், கே.ஜி.சாலை, மைசூரு வங்கி ஜங்ஷன், சாகர் ஜங்ஷன், ராஜிவ்காந்தி சதுக்கம், ரேஸ்கோர்ஸ் மேம்பாலம் வழியாக செல்லலாம். சாளுக்யா சதுக்கத்தில் இருந்து, மைசூரு வங்கியை நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக வரு ம் வாகனங்கள், ராஜ்பவன் சாலை, இன்பென்ட்ரி சாலை, இந்தியன் எக்ஸ்பிரஸ் வழியாக செல்லலாம். காளிதாஸ் சாலை, கனகதாசர் ஜங்ஷன் பகுதிகளில் இருந்து, சுதந்திர பூங்காவை நோக்கிச் செல்லும் வாகனங்கள், கனகதாசர் ஜங்ஷனில் இருந்து, வலதுபுறம் திரும்பி, சாகரா ஜங்ஷனை நோக்கிச் செல்லலாம். மவுர்யா சுப்பண்ணா ஜங்ஷனில் இருந்து, சுதந்திர பூங்காவை நோக்கிச் செல்லும் வாகனங்கள், சுப்பண்ணா ஜங்ஷனில் இருந்து, வலதுபுறம் திரும்பி, ஆனந்தராவ் சதுக்கத்துக்கு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி