உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருட்டு வழக்கில் இருவர் கைது ரூ.72 லட்சம் பொருட்கள் மீட்பு

திருட்டு வழக்கில் இருவர் கைது ரூ.72 லட்சம் பொருட்கள் மீட்பு

பெங்களூரு: திருட்டு வழக்கில் தங்கவயலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. பெங்களூரு, பேகூர் விஸ்வபிரியா லே - அவுட்டில் வசிப்பவர் முக்தா ஷெட்டர். இவர் கடந்த ஜூன் 16ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உடுப்பி சென்றார். இரண்டு நாட்கள் கழித்து திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டது தெரிந்தது. முக்தா அளித்த புகாரை அடுத்து, பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 14ம் தேதி, பேகூர் ஏரிக்கரை பகுதியில் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் தங்கவயல் சூசைபாளயாவை சேர்ந்த சாந்தகுமார், 37, என்பதும், தன் நண்பரான ஆண்டர்சன்பேட்டின் ஞானபிரகாசம், 40, என்பவருடன் சேர்ந்து முக்தா வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிந்தாமணி, தங்கவயலில் உள்ள நகைக்கடைகளில் இருந்து 614 கிராம் தங்க நகைகள், 470 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு, 72 லட்சம் ரூபாய். பேகூர், ஹொஸ்கோட், சிக்கபல்லாபூர் போலீஸ் நிலையங்களில் பதிவான 5 திருட்டு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை