உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாமனாருடன் உல்லாசமாக இரு மருமகளுக்கு மாமியார் தொல்லை

மாமனாருடன் உல்லாசமாக இரு மருமகளுக்கு மாமியார் தொல்லை

பி.டி.எம்., லே - அவுட் : மாமனாருடன் உல்லாசமாக இருக்கும்படி, மருமகளுக்கு தொல்லை கொடுத்த மாமியார் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட் மதர்சாப் லே - அவுட்டில் வசிப்பவர் அக்பர் பாஷா. இவரது மனைவி ஹுமைரா பானு. இவர்களின் மகன் யாசின் பாஷா, 26. இவருக்கும், ஷாஜியா, 24 என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன், திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் யாசினும், ஷாஜியாவும் பேசி, பழகினர். இந்நிலையில், 'ஷாஜியாவை திருமணம் செய்ய வேண்டாம்; வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்' என்று, யாசினிடம், அவரது பெற்றோர் கூறி உள்ளனர். இதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை. கடந்த மாதம் ஷாஜியாவை மைசூருக்கு அழைத்து சென்று, தர்காவில் திருமணம் செய்தார். பின், பெங்களூரு வந்தனர். மதர்சாப் லே - அவுட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். தங்கள் பேச்சை கேட்காமல் ஷாஜியாவை, யாசின் திருமணம் செய்ததால், ஷாஜியா மீது யாசின் பெற்றோர் கோபம் அடைந்தனர். தினமும் மகன் வீட்டிற்கு சென்று மருமகளிடம் தகராறு செய்தனர். மேலும், தனது கணவர் அக்பர் பாஷாவுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று, ஷாஜியாவுக்கு, ஹுமைரா பானு தொல்லை கொடுத்ததுடன், ஆபாசமாகவும் திட்டி உள்ளார். வாலிபர்களை இங்கு அனுப்பி, உன்னை கூட்டு பலாத்காரம் செய்ய வைப்போம் என்றும் மிரட்டி உள்ளனர். மனம் உடைந்த ஷாஜியா, மாமனார், மாமியார் மீது சுத்தகுண்டேபாளையா போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர். தங்கள் உயிரு க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், யாசின், ஷாஜியா தம்பதி, போலீசிடம் கோரிக்கை வைத்து உள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ