| ADDED : நவ 22, 2025 05:11 AM
பெங்களூரு: ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை கொலை செய்ய சதி செய்த வழக்கில், இரண்டு பயங்கரவாதிகளுக்கு தலா ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஷிவமொக்கா டவுன் தொட்டபேட் பகுதியில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஒரு சமூகத்தை சேர்ந்த கும்பல் தகராறில் ஈடுபட்டது. கடைகளில் இருந்த பொருட்களை சூறையாடியது. பிரேம் சிங், 27, என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. விசாரணையில் பிரேம் சிங்கை கத்தியால் குத்திய, இருவருக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஜபியுல்லா, நதீம் பைசல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை கொலை செய்ய சதி செய்ததுடன், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிந்தது. இருவரும் மீது பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி கெம்பராஜ், பயங்கரவாதிகள் இருவருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.