உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பூசாரியை தாக்கிய இரு வாலிபர்கள்

பூசாரியை தாக்கிய இரு வாலிபர்கள்

துமகூரு:இரண்டு வாலிபர்கள் பூசாரியை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துமகூரில் உள்ள தேவராயனதுர்கா கோவில் மலை மீது அமைந்து உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பூசாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பூசாரியை இரண்டு வாலிபர்கள் கையால் தாக்குகின்றனர். அவர்களுடன் இரு பெண்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். பிரம்பை வைத்தும் பூசாரி தாக்கப்படுகிறார். இச்சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. பூசாரி நாகபூஷணாச்சாரியார் படிக்கட்டுகளில் சென்ற பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !