உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் வழிபாடு

உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் வழிபாடு

உடுப்பி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு நேற்று வருகை தந்தார். சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். மத்தி ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஷிராவண பவுர்ணமியையொட்டி, நேற்று உடுப்பியின் கிருஷ்ணர் மடத்துக்கு வருகை தந்தார். மற்ற பெண்களை போன்று கிருஷ்ணர் முன்னிலையில் அமர்ந்து பூக்கட்டி, சுவாமிக்கு சமர்ப்பித்தார். அதன்பின் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் படைக்கும் பாத்திரங்களை தேய்த்து கழுவி வைத்தார். போஜன கூடத்தில் உணவு தயாரித்தார். கிருஷ்ணரின் பூஜைகளில் பங்கேற்றார். அப்போது ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தியும் உடன் இருந்தார். இதே வேளையில், உடுப்பி மடாதிபதி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, 'பாரத லட்சுமி' என்ற விருது வழங்கி கவுரவித்தார். இவரது இயற்பெயர் ருக்மிணி. உடுப்பியின் கிருஷ்ணர் விக்ரகம், ருக்மிணியால் பூஜிக்கப்பட்டது என்பது ஐதீகம். நாட்டின் நிதித்துறை பொறுப்பை ஏற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு, 'பாரத லட்சுமி' விருது வழங்குகிறேன்' என அறிவித்தார். நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நாடு தினமும் பல சவால்களை எதிர்கொள்கிறது. இவற்றை சமாளிக்க, கிருஷ்ணரின் அனுகிரஹம் வேண்டும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பிரதமரின் கையை பலப்படுத்த கிருஷ்ணரின் ஆசி வேண்டும். இந்த நாளில் நான் மிகவும் உணர்ச்சிவசமாக உணர்கிறேன். ரக்ஷா பந்தன் நாளன்று, கிருஷ்ணரை தரிசித்து, ஆசி பெற வந்துள்ளேன். அனைவரும் நாட்டின் முன்னேற்றத்துக்காக, கிருஷ்ணரை பிரார்த்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி