உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விஜயவாடா - பெங்களூரு விமானம் ரத்து

விஜயவாடா - பெங்களூரு விமானம் ரத்து

பறவை மோதியதால், விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் ரத்து செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 8:15 மணிக்கு ஐஎக்ஸ் 2011 என்ற ஏர் இந்தியா விரைவு விமானம், 160 முதல் 165 பயணியருடன் புறப்பட்டது. ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானத்தின் இன்ஜினில் பறவை மோதியது. இதை பார்த்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமானத்தை நிறுத்தினார். விமானியின் சாதுர்யத்தால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணியர் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இதுதொடர்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதாக சந்தேகம் எழுந்தது. இதனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணியருக்கு அசவுகரியம் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்' என்றது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !