மேலும் செய்திகள்
மழையால் சிக்கமகளூரு மக்கள் தத்தளிப்பு
01-May-2026
ஆலங்கட்டி மழை போக்குவரத்து பாதிப்பு
01-May-2026
பெங்களூரு: பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன், ஆலங்கட்டி மழை பெய்து பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தியது. வாகன பயணியர், சாலை நடுவில் சிக்கி திணறினர். இதையடுத்து, மழை பெய்யும் போது பின்பற்றும்படி போக்குவரத்து போலீசார், ஆலோசனைகள் வெளியிட்டுள்ளனர். பெங்களூரு போக்குவரத்து போலீசார், வெளியிட்ட அறிக்கை: கன மழை பெய்யும் போது, நகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக மாறுகின்றன. இப்பாதையில் செல்லும் வாகன பயணியர், நிதானமாக செல்வது நல்லது. இதற்காக போக்குவரத்து போலீசார் கூறிய ஆலோசனைகளை பின் பற்றுங்கள். அதாவது: மழை நீர் தேங்கும் இடங்களில், எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுங்கள் கனமழை பெய்யும் போது, தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள் மழை பெய்யும் போது நனையாமல் இருக்க, மரத்தடியில் நிற்காதீர்கள் சுரங்கப்பாதையில் நிற்காதீர்கள். இங்கு நின்றால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் செல்ல வேண்டிய இடத்தை பற்றி, தெளிவாக தீர்மானம் செய்து கொண்டு, அதன்பின் புறப்படுவது நல்லது மழை பெய்யும் போது, வாகனத்தை நிதானமாகவும், மற்ற வாகனங்களில் இருந்து இடைவெளி விட்டு ஓட்டுங்கள். ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டும் போது, திடீர் பிரேக் போடாதீர்கள் முடிந்த வரை நீர் தேங்கும் சாலைகளை தவிர்த்து, மாற்று சாலைகளை பயன்படுத்துங்கள் ஜங்ஷன்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களில் வாகனத்தில் செல்லும் போது, மிகுந்த கவனத்துடன் இருங்கள் பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் கூறும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள். இவ்வாறு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
01-May-2026
01-May-2026