உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு பஸ்சில் டிக்கெட் முன்பதிவு வாட்ஸாப் நடைமுறை அறிமுகம்

 அரசு பஸ்சில் டிக்கெட் முன்பதிவு வாட்ஸாப் நடைமுறை அறிமுகம்

பெங்களூரு: அரசு பஸ்களில், 'வாட்ஸாப்' மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பெங்களூரு 'பி.எம்.டி.சி., 2.0' செயலியை நேற்று முதல்வர் சிவகுமார் அறிமுகப்படுத்தினார். இச்செயலி இணையத்திலும் வெளியானது. இந்த செயலியை பயன்படுத்தி, மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கலாம். மேலும், பி.எம்.டி.சி., பஸ்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். பஸ் பாஸ்கள் பெற முடியும். பஸ் டிக்கெட்டை செயலி மூலமாகவே எடுக்கும் சேவை இம்மாத இறுதிக்குள் வரும் என கூறப்படுகிறது. இச்செயலி கன்னடம், ஆங்கில மொழிகளில் பயன்படுத்தலாம். அதே போல, 'ஒன் கர்நாடகா மொபிலிட்டி' செயலி மற்றும் 'வாட்ஸாப்' மூலம் அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை நேற்று அறிமுகமானது. 6364940880 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் அனைத்து அரசு பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒன் கர்நாடகா மொபிலிட்டி செயலியில் போக்குவரத்து கழகங்கள் குறித்து புகார்களை பயணியர் தெரிவிக்கலாம். மேலும், மாதாந்திர பஸ் பாஸ்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை