உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., ரூரல் மாவட்ட பெயர் மாற்றம் ஏன்?

பெங்., ரூரல் மாவட்ட பெயர் மாற்றம் ஏன்?

பெங்களூரு: பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் பெயரை, பெங்களூரு வடக்கு என்று மாற்றம் செய்தது ஏன் என்பது குறித்து, தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் 1986 காலகட்டத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்தபோது, நிர்வாக காரணங்களுக்காக பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல் என, பெங்களூரு இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் தொட்டபல்லாபூர், ஹொஸ்கோட், நெலமங்களா, ராம்நகர், மாகடி, கனகபுரா, சென்னப்பட்டணா ஆகிய தாலுகாக்கள் இருந்தன. 2007ல் குமாரசாமி முதல்வராக இருந்தபோது கோலார் மாவட்டத்தை இரண்டாக பிரித்து சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் மாவட்டத்தை பிரித்து ராம்நகர் மாவட்டத்தை உருவாக்கினார்.ராம்நகர் மாவட்டத்தில் ராம்நகர், கனகபுரா, மாகடி, சென்னப்பட்டணா தாலுகாக்கள் சென்றன. இதையடுத்து பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் கீழ் தேவனஹள்ளி, தொட்டபல்லாபூர், ஹொஸ்கோட், நெலமங்களா ஆகிய நான்கு தாலுகாக்கள் கொண்டு வரப்பட்டன. பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் நான்கு தாலுகாக்களும் தற்போது மேம்பட்டு வருகின்றன.தேவனஹள்ளியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. தொட்டபல்லாபூர், நெலமங்களாவில் தொழிற்பேட்டைகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூரின் நுழைவுவாயிலாக ஹொஸ்கோட் உள்ளது. 'எக்ஸ்பிரஸ் வே' சாலையால் ஹொஸ்கோட் மவுசும் கூட உள்ளது.ஆனாலும் பெங்களூரு ரூரல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் முனியப்பா, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் பெயரை, பெங்களூரு வடக்கு என மாற்றும்படி, அரசுக்கு, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.பெங்களூரு ரூரல் என்றால் கிராம பகுதி என்று ஆகிவிடும்; பெங்களூரு வடக்கு என்றால் நகர்ப்பகுதி ஆகும். மேம்பாட்டுப் பணிகளும் வேகமாக நடக்கும். முதலீடுகளும் குவியும் என, எடுத்துக் கூறினார். அனைத்தையும் அலசி ஆராய்ந்த பிறகே, பெயரை மாற்ற அரசு முன்வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி